நதிகளும் கடலை நோக்கியே செல்கின்றன' என்பதுபோல், 'அனைத்து மதங்களும் இறைவனிடமே நம்மைக் கொண்டுச் செல்லும்' என்பார்கள். ஆனால் புத்த மத்தின் தனிச் சிறப்பு அது கடவுளை நோக்கிச் செல்லவில்லை, மனிதனின் நடைமுறை வாழ்வை மையப்படுத்துகிறது என்பதுதான்.

'ஆசையை விட்டொழி
துன்பம் இல்லை.
அன்பு செய், அமைதி கொள்
ஆனந்தம் உண்டு' என்று மனித குலத்தின் மிகப்பெரிய பிரச்னைகளுக்குத் தீர்வு சொன்னார் புத்தர். நமக்கு எளிதாய்த் தெரியும் இந்தத் தீர்வைக் கண்டறிய ஆண்டுக் கணக்கில் அவர் ஊணுறக்கமின்றி வனத்திடை அலைந்து திரிந்திருக்கிறார்.

 
'சமூகப் பிரக்ஞையல்லவா அவரைச்
சொந்த சவுகரியங்களைத் துறக்கச் செய்தது
சித்தார்த்தன் என்கிற அரசகுமாரன்
புத்தனானது வேறெதற்கு?'


ஆயிரம் ஆண்டுகளுக்ப் பிறகு புத்தரால் கவரப்பட்ட இன்னொரு அரசகுமாரன் புத்தரைப் போலவே அரண்மனையைவிட்டு வெளியேறினார். அவர்தான் போதி தர்மர்.
புத்தருடைய நேரடி சீடர்களான சாரிபுத்ரர், மகா காசியபர், மவுத் கல்யாயனா, சுபுதி, பூர்ணா, காத்யாயனா, உபாலி அநிருத்தர், ராகுலர் (புத்தரின் மைந்தர்), ஆனந்தர் (புத்தரின் சிற்றப்பா பிள்ளை) ஆகியோரின் பெயர்களை உலகம் மறந்து விட்டது. ஆனால் புத்தருக்குப் பின் போதி தர்மர் பெயர் மட்டும் இன்றளவும் நிலைத்திருக்கிறது. என்ன காரணம்? அவர் புத்த தர்மத்தைப் போதிப்பதோடு நின்று விடவில்லை. மக்கள் புத்த நெறியை வாழ்க்கைமுறையாய்க் கொள்ள வேண்டும் என்பதில் உறுதி காட்டியதுதான். 
புத்தர் சாந்தமானவர் என்றால் போதி தர்மர் கொஞ்சம் முரட்டுத்தனமானவர். சீனத்தில் ஹுய்கோ என்பவனை அவர் சீடனாக்கிய முறை, சக்ரவர்த்தி வூ அரசருக்கு ஞானம் புகட்டிய முறை இவற்றில் இருந்தே அவருடைய வழி புலப்படும். அதேசமயம் கல்லுக்குள் ஈரம் போல் எல்யைற்ற கருணையும் அவருள் தங்கியிருந்தது. 
புத்தருடைய காலத்திலேயே இலங்கை, சீனம் போன்ற நாடுகளுக்கு புத்தம் பரவியது என்றாலும் போதி தர்மரின் முயற்சியில்தான் சீனத்தில் அது செழிப்புற்றோங்கியது. அங்கிருந்து ஜப்பான், கொரியா, தாய்லாந்து என்ற அநேக நாடுகளுக்கும் அது பரவ முடிந்தது. புத்தத்தின் ஒரு பிரிவாக இன்னொரு பரிமாணமாக&திருந்திய பதிப்பாக ஜென்னை நிறுவினார் போதி தர்மர். 


'வாழ்வின் மகிமை அதன் எனிமையில் இருக்கிறது' என்கிறது ஜென். மற்றவர்கள் எதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்களோ அதை ஜென் மரபினர் பொருட்படுத்துவதில்லை. மற்றவர்களுக்கு அற்பமாய் தெரிகிறவைகளில் அற்புதத்தைக் காண்பவர்கள் அவர்கள். 
ஜென் வழி மாந்தர்கள் தனிமையில் இருக்கும்போது மக்கள் மத்தியில் இருப்பது போலவும், சந்தைப் பேட்டையில் இருந்து கொண்டு தீவில் இருக்கும் ஏகாந்தி போலவும் உணரக் கூடியவர்கள். 


.

Read 28871 times
Rate this item
(0 votes)
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %