சாண்டோ சின்னப்பா தேவர்

ஏவி. மெய்யப்பச் செட்டியார், நாகி ரெட்டியார், எஸ்.எஸ். வாசன்,மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்  போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்குள் சாமானியனாக நுழைந்து, சரித்திர சாதனைகள நிகழ்த்திய சாண்டோ சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாறு. 

-பா. தீனதயாளன்

காபி  கம்பெனியில் எடுபிடியாக இருந்த தேவருக்கு ஆறு ரூபாய் மாதச் சம்பளம்.  பின்னர் இரும்புப் பட்டறையில் ஒன்பது ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தார். அண்ணனின் வீரமாருதி தேகப் பயிற்சி சாலையில் குஸ்தி பயிற்சியில் ஈடுபாடு. எப்போதும் பசி, பஞ்சம், பட்டினி என்று ஓடிய வாழ்க்கை.  ஒன்பது ரூபாய் சம்பளம், யானை வாய்க்கு சோளப்பொறி கொடுத்த கதையாகத்தான் இருந்தது. பெரிய சண்டியர் என்று பெயரெடுத்தவர்தான். என்றாலும், நாணயஸ்தனாக இருக்க வேண்டும் நினைத்ததால் சாப்பிட்டதற்கான கடனைத் தரமுடியாது அடிவாங்கி அவமானப்பட்டார் தேவர். அதனால் ஏழைமையை வென்றுவிட வேண்டும் என்ற வெறி மனத்துக்குள் கனன்றவண்ணம் இருந்தது. 

ஒரு சமயம் பெற்றோர் கோயிலுக்கு அழைத்தபோது “மருதமலை சாமியை எப்பப் பார்த்தா என்ன? அந்த இடத்தைவிட்டு மலையும் நகரப்போவதில்லை. சிலையும் பறக்கப் போவதில்லை” என்று கேலி பேசியவரை, ”நான் கல்லில்லை, கடவுள்” என்று முருகன் உணரச் செய்தான்.   தேவர் குலம் காக்கும் வேலன் காலடிகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார் தேவர். தொட்டதெல்லாம் துலங்கியது.

 
மாபெரும் ஜாம்பவான்களான ஏவி.எம், வாஹினி, ஜெமினி பட நிறுவனங்கள் கோலோச்சி வந்த திரை உலகத்தை தன்பால் திரும்ப வைத்த பெருமைக்குரியவர்.  தன் குலத்தவரான சிவாஜிகணேசன் தன் இனம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் அவரோடு தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டாலும், எம்.ஜி.ஆருக்குத் தான் செய்துகொடுத்த  சத்தியத்துக்காக அவரை வைத்துப் படமெடுக்காதிருந்த நேர்மை இவர் புகழை பன்மடங்கு உயர்த்தியது. இவரது பயமில்லாத்தன்மைதான் எல்லோருக்கும் வாத்தியாராக இருந்தவரை இவரை வாத்தியாராக ஏற்க வைத்தது.  ஹிந்தி சினிமாவின் கனவு நாயகனான ராஜேஷ் கன்னாவை ”ஹாத்தி மேரா 
சாத்தி” வசூல் இவரிடம் பக்தி கொள்ள வைத்தது. இவரது பெருந்தன்மை லஷ்மிகாந்த், பியாரிலாலை இவருக்குப் பணிய வைத்தது. 
இப்படி தேவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பண்புகளும் பாடங்களும் ஏராளம். 

நூலாசிரியர் பா. தீனதயாளன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். தீவிரமான ஆய்வாளரும்கூட. தமிழ் சினிமாவின் அதிமுக்கிய ஆளுமைகளான சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் புத்தகமாகப் பதிவுசெய்திருக்கிறார். இவர் எழுதிக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு விரைவில் சிக்ஸ்த்சென்ஸ் வெளியீடாக வரவிருக்கிறது.

Read 26850 times
Rate this item
(0 votes)
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %