ஸ்பெயின் நாட்டில் லாமாஞ்சா என்றொரு ஊர் . அங்கே ”குஜானா” எனும் பெயருள்ள ஒரு மனிதர் ; 'மெலிந்துஇ உயரமாக அகன்ற மார் புடன் மகா கம்பீரமான தோற்றம்' ; 'நீண்டு வற்றினஇ சங்கடம் பிரதிபலிக்கும் முகம் ! வயதும் ஐம்பது ' ! இவர்தான் இந்தக் கதையின் தலைவர்!

-பேராசிரியர்  சாலமன் பாப்பையாபுத்தகம் படிப்பதில் இவருக்கு மிகுந்த ஆர் வம். அதிலும் வீராண்மைக் கதைகள் என்றால் விட மாட்டார் . புத்தகங்களுக்காகவே 'இரண்டு இரவுகளும் இரண்டு பகலும்' (ப53) செலவழித்துத் தொடர்ந்து படித்துக் கற்பனைக் கனவுகளில் மிதப்பார் . அதனால் அரைப் பைத்தியம் (!) ஆகிப்போனார் . வீரன் என்றால் தோழன் வேண்டாமோ?. சிக்கியவன் 'நாகரிகமற்ற சாஞ்சோ பாஞ்சோ என்ற விவசாயி' தான்!. அவனிடமும் இவர் 'கெஞ்சிக் கேட்டும் வாக்குறுதி அளித்தும் சம்மதம் (ப65) பெறுகிறார் . வீரனுக்கு ஏறிச் செல்ல குதிரை?. அவர் வீட்டில் இருந்த 'மெலிந்த' குதிரை தான்!. இப்போதைக்கு வேறு என்ன செய்வது ?. சமாளிக்க வேண்டியது தான்!. அவருக்கே இதுதான் என்றால் தோழனுக்கு ?. அவன் வீட்டுக் கழுதைதான்!. ஜாடிக் கேத்த மூடி ; சரியான ஜோடி! வீரன் என்றால் காதலி இருக்கணுமே ! அவள் இல்லாமலா ?. 'காதலி இல்லாத வீரன் இலை இல்லாத மரத்துக்குச் சமம்' அல்லவா!. கற்பனையில் ஒரு காதலி. அவள் பெயர். 'டல்சீனியா டல் துபாசோ'! போதாதா? வீரம் விளைவித்து வெற்றியுடன் திரும்ப ஒரு பயணம் தயார் ! 
இன்றைக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1605) செர்வான்டெஸ் என்பவர் தன் தாய்மொழியை அழகுபடுத்த ஸ்பானிஸ் மொழியில் இந்நூலை எழுதினார் . ”மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு” என்று பலராலும் இது பாராட்டப் பெற்றிருக்கிறது.


நூலுள் வீரர்கள் பயணிக்கிறார் கள் ; வாசகர்களாகிய நாமோ மனத்தால் மகிழ்ச்சியோடும்இ வியப்போடும் பயணிக்கிறோம்'. இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பாகத் தோன்றவில்லை; தமிழில் ஒரு புதிய படைப்பு என்னும்படி மிக இயல்பாக இருக்கிறது. 'தர்மப் போர் ' (ப69), 'ஈமக்கிரியைகள் ' (170), மணமகனின் தகப்பன் முறைப்படி மகனுக்குப் பெண் கேட்பது (236), 'கற்பு' (285), காலைத் தொட்டுக் கும்பிடப் போதல் (288), எனவரும் சொற்களும்இ மரபுகளும் இந்தியப் பண்பாட்டையே நினைவுபடுத்துகின்றன. 
'குற்றவாளியின் பாவத்துக்காக சில சமயம் ஒரு குற்றமும் செய்யாதவர்களும் தண்டிக்கப்படுகிறார் கள்' - (பாவம் ஒரு பக்கம் பழி மற்றொரு பக்கம்) - (61), 'இறந்தவருக்குக் கல்லறை' இருப்பவருக்கு ரொட்டி' (174)- (செத்தவன் வாய்ல மண்ணு ; இருப்பவன் வாய்ல சோறு) 'அடிக்கிற கைதான் அணைக்கும்' (192) 'கால தாமதத்தில் ஆபத்து இருக்கிறது' (294) என்று நிறைய பழமொழிகள். இவற்றை எல்லாம் படிக்கும் போது சுவை குன்றாமல் இந்திய மரபுகளோடு பயணிக்கும் அனுபவம் பிறக்கிறது.
கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் வீர சாகசங்களைப் பற்றிய கதைகளை கற்பனைகளை கனவுகள் மலிந்திருந்தது தெரிகிறது. வீராண்மைக் கிளர்ச்சியும், மந்திரவாத அச்சமும் அன்றைய ஐரோப்பிய மனிதர்களை 'அரைக்கிறுக்கர்' களாக்கி விட்டிருந்தன. இதில் ஸ்பெயின் எங்கும் பாதிரியார்கள்; மடங்களை சத்திரங்கள். காதல் நினைவுகளோடும், ஏக்கங்களோடும் காத்திருக்கும் கன்னியர்; அவர்கள் 'எங்கே ஒளிந்திருத்தாலும் தேடிப்பிடித்து அவர்களை நாசப்படுத்தும் (99) மனிதர் ; மதம் கடந்தும் காதலித்து நிறைவேற்ற முடியாமல் திணறிய காதலர்கள் (156); காதலிக்காகவே போரிடும் வீரர்களை அவர்களுக்காக எழுதப்படும் காதல் கடிதங்கள் ; ஒழுங்கற்ற மேடு பள்ளமான பாதைகள் - என அந்த நூற்றாண்டின் ஸ்பெயின் மண்ணையும் மனிதர்களையும் அழகுறச் சித்திரிக்கும் எழுத்துச் சித்திரம் இது.


இந்நூலின் மூல ஆசிரியர் செர்வாண்டெஸ் ஒரு யூதராம்!. அவர் எழுதிய காலத்தில் இது ஓர் இனிய நகைச்சுவைக் கதை என்றே எண்ணப்பட்டது. திறனாய்வாளர் காலந்தோறும் மாறுபட்டுப் பயிலுந்தோறும் ஒரு புதுப்பொருள் பூக்கும் முப்பட்டைக் கண்ணாடி ஜாலமாய் இதைக் காண்கின்றனா;. 
நல்லவை எங்கே இருந்தாலும் தங்கள் மொழிக்குக் கொண்டு சேர்த்து விடும் ஆங்கிலேயர் பல்வேறு மொழிபெயர்ப்புகளை பலப்பல பதிப்புகள் செய்து தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள். காலம் கடந்தாலும் தமிழில் தரமான மொழிபெயர்ப்பை - ஓ! இப்படி ஒரு மொழிபெயர்ப்பா? என்று வியக்கும்படி - இயல்பான நடையில் பெரியோரும் சிறியோரும் விரும்பிப் படிக்குமாறு பக்கத்திற்குப் பக்கம் நல்ல படங்களோடு வழங்கி அமரர்.ஆ.அலங்காமணி அவர்கள் தமிழ் மொழிக்குப் புதிய அணியைச் சூட்டி இருக்கிறார் . 
'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்' -- இது மகாகவி பாரதி ஆணை. அதை முறையாகப் பின்பற்றியிருக்கும் இந்நூலாசிரியருக்கு என் வணக்கங்கள். சிறந்த தமிழ் ஆர் வலரான தமது தந்தையின் நினைவைப் போற்றும் வண்ணம் இந்நூலை வெளிக் கொணரப் பாடுபட்ட அவர்தம் பிள்ளைகளுக்கு என் பாராட்டுக்கள். இதைச் சிறப்பாக பதிப்பித்திருப்பவர்களுக்கு என் வாழ்த்துகள்.

Read 54099 times
Rate this item
(0 votes)
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %