பராக் உசேன் ஒபாமா ( பிறப்பு: ஆகஸ்ட் 41961), ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய குடியரசுத் தலைவர். 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சிவேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார், நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.[1] அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்தும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலிருந்தும் பட்டங்களை பெற்ற ஒபாமா அரசியல் உலகத்தை சேர்வதற்கு முன்பு சிக்காகோவின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997இல் இலினொய் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவியில் இருந்தார். 1992 முதல் 2004 வரை சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 2000இல் அமெரிக்கக் கீழவை தேர்தலில் தோல்வி அடைந்து 2003 ஜனவரியில் மேலவையை சேர்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கினார். இலினொய் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுதே, 2004ல் மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் ஆற்றிய சிறப்புரை தேசிய அளவில் கவனம் பெறச்செய்தது. பின்னர் நவம்பர் 2004 இல் அமெரிக்க மேலவை தேர்தலில் 70% வாக்குகளைப் பெற்று மேலவையை சேர்ந்தார்.

2004இல் மக்களாட்சிக் கட்சி மேலவையில் சிறுபான்மையாக இருந்த காலத்தில் ஒபாமா பதவியில் ஏறினார். நடுவண் அரசின் ஆயுதங்கள் கட்டுப்பாட்டை உறுதியாக்க சட்டத்தை படைத்தார். 2006இல் மக்களாட்சி கட்சி பெரும்பான்மை பெற்றதற்கு பிறகு தேர்தல் மோசடி, காலநிலை மாற்றல், அணுசக்தி தீவிரவாதம், முன்னாள் படையினர்களுக்கு நல்வாழ்வு போன்ற பிரச்சனைகளை தொடர்புடைய சட்டங்களை எழுதினார். பெப்ரவரி 2007இல் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியை அறிவித்த ஒபாமா ஈராக் போரை முடிவுக்கு கொணர்தல்,ஆற்றல் சுதந்திரம் அடைதல், வெளி அமைப்புகளால் அரசியல்வாதிகள் மீது தாக்கத்தை குறைதல், அனைவருக்கும் சுகாதார திட்டம் என்றே தனது முக்கிய நோக்கங்கள் என்று கூறுகிறார்.

Read 109008 times
Rate this item
(0 votes)
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %