என் தந்தை பதிப்பாளர். சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, பிழைப்புக்காக இலங்கைக்குச் சென்றவர். பணிபுரிந்தது வீரகேசரி பத்திரிக்கையில். தாய் நாடு திரும்பிய பின் 17 வருடங்கள் வேலை பார்த்தது ஒரு புத்தக நிறுவனத்தில். அவருக்கு இப்போது வயது80. 1968 ல் பூங்கொடி பதிப்பகத்தைத் தொடங்கினார். இன்றும் அதன் அன்றாட நிர்வாகத்திலிருந்து அனைத்து செயல்பாடுகளும் அவருடைய மேற்பார்வையில் தான் நடக்கின்றன.
அப்பா வியாபார நுணுக்கங்களில் கரை கண்டவரில்லை. மேலாண்மைத் தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவருமில்லை. தன்னுடைய நேர்மையாலும், கடும் உழைப்பாலும் பதிப்புலகத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.
எனக்கு குருநாதர் அவர்தான். பள்ளிப் பருவத்திலேயே பதிப்புத் துறைக்கான பயிற்சியை எனக்கு அளித்தார். அப்பொழுதிலிருந்தே புத்தகத் தொழிலின் மீதான என் காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.hjhjhhhh


அறிஞர்களும், அரசியல்வாதிகளும் அப்பாவைப் பார்க்க வந்து கொண்டேயிருப்பார்கள். அவர்கள் பேச்சுகளைக் கேட்டும் எழுதிய புத்தகங்களைப் படித்தும் நான் வளர்ந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை புத்தகங்கள்தான் எனக்கு நல்ல தோழர்கள்; வழிகாட்டிகள். எந்த ஒரு தொழிலிலும் சிரமங்களும் இழப்புகளும், சறுக்கல்கள்களும் இருக்கத்தான் செய்யும். அவற்றையெல்லாம் தாண்டித்தான் வெற்றிக் கொடிகட்ட வேண்டும்.
தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு முயற்சிகளைத் தொடர்ந்தால் சாதனைகள் பல சொந்தமாகும்.
மாற்றங்களை, புதுப்புதுத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவத்தோடும், அவற்றை காலந்தாழ்த்தாமல் நடைமுறைக்குக் கொண்டு வருவதில் முனைப்போடும் இருந்தால் மட்டுமே ஒரு தொழிலில் தொடர்ந்து முன்னணியில் இருக்க முடியும். .
என்னிடம் பலரும் ஆரம்பகால கட்டத்தில் கேட்டுக்கொண்டே இருந்த ஒரு கேள்வி : கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குப் போயிருக்கலாமே. அதை விட்டுவிட்டு இந்தத் தொழிலுக்கு ஏன் வந்தாய்?
எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது. அதனால் வந்தேன். வேலைக்குப் போய் சாதிப்பதை விட இதில் அதிகமாய்ச் சாதிக்கலாம். இது என்னுடைய பதில்.
இளைய தலைமுறைக்கான என்னுடைய செய்தி இதுதான் :
விருப்பப்பட்டு செய்கின்ற எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி நிச்சயம்.
பதிப்புத்துறையிலும் எழுத்துத் துறையிலும் எண்ணற்ற வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்கள் வரவை எதிர்பார்த்து அவை காத்துக் கிடக்கின்றன்
மூன்றாவது தலைமுறையிலிருந்து என் மகன் கார்த்திகேயன் விருப்பத்துடனும் துடிப்புடனும் என்னுடன் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் தொழிலில் நவீனத்தைப் புகுத்தவும் வந்துள்ளார்.
ஆர். முத்துக்குமார் ஆறாம் பார்வைக்கும், சிக்ஸ்த்சென்ஸ் குழுமங்களுக்கும் ஆசிரியராய்ப் பொறுப்பேற்று இளமையும், தொழில்நுட்ப அறிவும், வாசிப்பை தங்கள் சுவாசமாக நினைக்கிற, எழுத்துக்களில் புதுமை படைக்கும் தாகத்துடன் புறப்பட்டிருக்கிற அணியோடு உங்களுடன் பலவற்றையும் பகிர்ந்துகொள்ள வருகிறார்.
பதிப்புத் துறை குறித்த எனது பார்வையை அதில் எனக்குள்ள அனுபவத்தை, அதில் எனக்குத்தெரிந்த செய்திகளை, உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பகுதி. வாருங்கள் புத்தகங்களாலான புதியதோர் உலகு செய்வோம்.

Read 69589 times
Rate this item
(0 votes)
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %