அஸ்கர் அலி எஞ்சினீயர்
கனிவான ஞானப் பிழம்பு

என்னைவிடச் சரியாக ஒராண்டு, ஒரு மாதம் மூத்தவர் அவர். எனினும் பல
ஆண்டுகள் மூத்தவராகத் தோற்றமளிப்பார். அது மூப்பின் அடையாளம் அல்ல; அறிவு
முதிர்ச்சியின், கனிவு நெஞ்சத்தின், ஞானப்
பெருக்கின் வெளிப்பாடு. கடைசியாக நேரில் சந்தித்தது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்; அவரது குரலைத் தொலைபேசி வழியாகக்
கேட்கும் கடைசி வாய்ப்பு 2009&ல். மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தின்
செயல்பாடுகள் அனைத்திற்கும் முன் அனுமதி இல்லாமலேயே தனது பெயரைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தவர். அஃப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கண்டித்து சென்னையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்புப் பேச்சாளர்களாகச் சிலரை அழைக்க விரும்பினோம். அஸ்கர் அலி எஞ்சினீயரும் ஆனந்த் பட்வர்தனும் கட்டாயம் வருவார்கள்

என எதிர்பார்த்தோம். ஆனால், குல்திப் நய்யார் மட்டுமே வர ஒப்புக் கொண்டார்.
‘மெய்ன்ஸ்ட்ரீம்', ‘எகனாமிக் அண்ட்
பொலிடிகல் வீக்லி' ஏடுகளில் வெளிவந்த கட்டுரைகள் மூலமாக எனக்குத் தெரிய வந்தவர்களிலொருவர்தான் அஸ்கர் அலி எஞ் சினீயர். தங்கள் பெயர்களின் பின்னொட்டாகத் தாங்கள் செய்து வரும் தொழிலின் பெயரையும்
போட்டுக் கொள்ளும் பழக்கம் பார்ஸிகள் சிலரிடமுண்டு. எனவே அஸ்கர் அலியும் ஒரு பார்ஸிதானோ,அப்படியானால் அவர் ஏன் ஒரு முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டார் என்னும் கேள்வி எனக்குள் இருந்து வந்தது. அவர் கெய்ரோவில் இருக்கையில், மதவெறியனொருவனால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த பிறகே, தாவூதி போரா என்னும் பெயரில் முஸ்லிம் மதப் பிரிவொன்று இருப்பதும், தாவூதி போரா மதகுருவாக இருந்தவருக்குப் பிறந்தவர்தான்

அஸ்கர் அலி என்பதும், சிவில் எஞ்சினியரிங் பட்டப் படிப்புப் படித்தவராதலால் ‘எஞ்சினீயர்' என்று அவர் அழைக்கப்பட்டார் என்பதும் எனக்குத் தெரிய வந்தன.
சென்னைவாசியாக இருந்த காலத்தில்,அவருக்குப் பல முறை விருந்தோம்பும் பேறு பெற்றிருக்கிறேன். தமிழகத்தில் சென்னை தவிர, மதுரை போன்ற நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றிருக்கிறார். எனவே அந்த நகரங்களுக்குப் பயணம் செல்வதற்கு
முன்பும் பின்பும் அவரைச் சந்திக்கவும் உரையாடவும் நல்வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றன. 1980களிலேயே அவருடனான நேரடித் தொடர்புகள் ஏற்பட்டன.
முதல் சந்திப்பின் போது, கோவை ஞானியும் நானும் 1970களில் மிகவும் விரும்பிப் படித்ததும் மார்க்ஸிய
நோக்கில் முகம்து நபி, இஸ்லாம் ஆகியோர் பற்றிய வரலாற்றை எழுதியவருமான மாக்ஸிம் ரோடின்ஸன் என்பாரின் ‘விஷீலீணீனீனீமீபீ' என்னும் நூலைக்

குறிப்பிட்டேன். சில நொடி நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த அவர், ‘வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில், தக்க வரலாற்றுத் தரவுகளுடன் எழுதப்பட்டுள்ள நூல்தான்;ஆனால், நபிகள், இஸ்லாம் மீதான பற்றுறுதியோடு எழுதப்படவில்லை; ‘ஷிமீஸீsமீ ஷீயீ ழிuனீவீஸீஷீus' (புனிதம் பற்றிய உணர்வு) ரோடின்ஸனிடம் இல்லை' என்று கூறினார். அவரது ஆன்மீக உணர்வை, நபிகள் மீது அவருக்கு இருந்த ஆழமான பற்றுறுதியை அப்போதுதான் முதன் முதலில்
தெரிந்து கொண்டேன். சில ஆண்டுகளுக்குப் பின், அவர் எழுதிய நூலின் தமிழாக்கமான ‘இஸ்லாமின்
தோற்றமும் வளர்ச்சியும்: அதன் சமூகபொருளாதார வளர்ச்சி பற்றிய ஓர் ஆய்வு' என்னும் நூலைத் திறனாய்வு செய்து ‘சுபமங்களா'வில் கட்டுரை எழுதிய
போதும், தஸ்லிமா நஸ்ரின் விவகாரத்தில் மிகுந்த கண்ணியத்தோடு அவர் 'இந்து' நாளேட்டில் எழுதிய கட்டுரை தொடர்பாக அவருடன் விவாதித்த போதும் (அவருடைய கருத்துகளில் சில எனக்கு அப்போது உடன்பாடானவையாக இருக்கவில்லை என்றாலும்
பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு அவர் காட்டிய எதிர்ப்பு ஐயத்துக்கிடமற்றதாக இருந்தது. இவை குறித்து 1994இல் ‘காலச்சுவடி'ல் எழுதியிருக்கிறேன்), அவரது மார்க்ஸிய அறிவு, பெண் விடுதலையில் அவருக்கு இருந்த ஆழ்ந்த அக்கறை, தஸ்லிமா விவகாரத்தை இந்துத்துவவாதிகள் பயன்படுத்திக் கொள்வதால் இந்தியாவிலுள்ள மதச்சர்பற்ற சக்திகளுக்கு ஏற்படும் ஆபத்து பற்றிய அவரது கவலைகள் ஆகியனவற்றை அவர் வெளிப்படுத்திய போதும் அவர் மீது எனக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
ஸல்மான் ருஷ்டியின் ‘ஷிணீtணீஸீவீநீ க்ஷிமீக்ஷீsமீs' பற்றிய

சர்ச்சைகள் உலகெங்கும் எழுப்பப்பட்டுக்
கொண்டிருந்த நாட்களில் ஒரு முறை அவர் மதுரையிலுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க
வேண்டியிருந்தது. போகும் வழியில் ஒரு பகல்
முழுவதையும் எனது இல்லத்தில் கழித்தார். ஸல்மான் ருஷ்டிக்கு எதிராக ஆயத்தொல்லா
கொமானி பிறப்பித்த ‘ஃபட்வா'வை ஏற்றுக்
கொள்ள முடியாது என்றும், அதேவேளை ‘கருத்துச் சுதந்திரத்தின் காவலர்களாக'த் தங்களைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின்
போலித்தனத்தையும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மனப்பான்மையையும், அங்கு கருத்துச்
சுதந்திரம் மறுக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும் நாம் மறந்துவிடலாகாது என்றும் ‘ரோஸா
லுக்ஸம்பர்க் படிப்பு வட்ட'த்தின் சார்பில் அஸ்கார் அலி எஞ்சினீயர், எம்.எஸ். எஸ்.பாண்டியன், வ.கீதா, நான் இன்னும் பலர்
கையொப்பமிட்டு அனுப்பிய கடிதம் ‘இந்து'. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' போன்ற நாளேடுகளில்
வெளியிடப்பட்டது. நபிகள் பற்றி ருஷ்டி தீட்டியிருந்த கறுப்புச் சித்திரம் அஸ்கர் அலி எஞ்சினீயரை மிகவும் புண்படுத்தியிருந்தது என்றாலும், அவரது உணர்வுகளை நாங்களும் பகிர்ந்து கொண்டிருந்த போதிலும், அந்தப் பிரச்சனையை ‘கருத்துரிமை' என்னும்
கோணத்திலிருந்தும் பார்க்க ஒப்புக் கொண்ட அவரது பெருந்தன்மையை எங்களால் ஒரு
போதும் மறக்க முடியாது.
2
இஸ்லாத்தின் இரு பிரிவுகளிலொன்றான ‘ஷியா'வின் உட்பிரிவுகளிலொன்றான தாவூதி
போரா முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மதகுருவொருவரின் மகனாக, 1939 மார்ச்
10 ஆம் நாள் இராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு அருகிலுள்ள சிறு நகரத்தில் பிறந்த அஸ்கர் அலி, சிவில் எஞ்சினீயரிங் படிப்பில் பி.எஸ்ஸி பட்டம் பெற்ற பிறகு பம்பாய் பெரு நகராட்சியில் கழிவுகள், கழிவு நீர் அகற்றும்
துறையில் சிறிதுகாலம் பொறியியலாளராகப் பணியாற்றினார். நீண்ட காலம் ஊதியமில்லாத விடுப்பில் இருந்த பிறகு, 1983இல் அந்தப் பதவியிலிருந்து விலகி சமூகத் தொண்டிற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு
செய்தார். சிறுவனாக இருந்த போது, இந்திய
பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட இரத்தக்

களரிகள், வகுப்புவாத வன்முறைகள் ஆகியன பற்றிய செய்திகள் அவரது இளம் நெஞ்சத்தைக் கசக்கியிருந்தன. கல்வி கற்கும் நாட்களில் அவரும் அவரது சக முஸ்லிம் மாணவர்கள் சிலரும் இந்து மத வெறி பிடித்த மாணவர்களின் ஆபாசமான முஸ்லிம் விரோத வசைமாரிகளை அனுபவித்திருக்கின்றனர். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஜபல்பூரில் நடந்த மிகக் கொடூரமான வகுப்புவாதத் தாக்குதல்களிலிருந்து தொடங்கி, பாபர் மசூதி இடிப்புக்குப் பின் மும்பையிலும் பிற இடங்களிலும் நடந்த கலவரங்கள், 2002இல்
குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான இனக்
கொலைகள் வரை அனைத்துமே அவரது இதயத்தில் ஆழமான புண்களை ஏற்படுத்தின. எனினும் அவர் மதத்தை அடிப்படையாகக்
கொண்ட அரசியலையோ, மதத்தின் பெயரால் ஒரு தேசம் உருவாக்கப்படுவதையோ ஒரு
போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. 1947ல் ஏற்பட்ட இந்திய&பாகிஸ்தான் பிரிவினை இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் ஏற்பட்ட மாபெரும் அவலம், இமாலயத் தவறு என்னும் எண்ணமே அவரது மனதில் வலுப்பட்டுக்
கொண்டிருந்தது. வகுப்புக் கலவரங்கள்
நடக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றுக்கான

காரணங்கள், அவற்றில் ஈடுபட்டவர்கள் யார் என்பன பற்றிய ஆழமான ஆய்வுகளை அவர்
நேரடியாகவே மேற்கொள்வார்.
வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்காகவே
முஸ்லிம்கள் ‘தாஜா' செய்யப்படுகிறார்கள் என்னும் இந்துத்துவப் பிரச்சாரத்தை
முறியடிக்கும் பொருட்டு, இந்துத்துவச் சக்திகளின் வகுப்புவாத அரசியலே, இந்தியாவிலுள்ள முஸ்லிம் சிறுபான்மையினரின் அரசியல்,பொருளாதார நலிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது என்னும் ஆழமான வாதத்தை முன்வைத்து சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கப் போராடினார். இஸ்லாம் மதமும் பயங்கரவாதமும் ஒன்றே என்னும் கருத்தைப் பரப்ப மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து வந்தார்.
மார்க்ஸியத்தைப் போலவே இஸ்லாமும் நபிகளின் போதனைகளும் சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும்
நோக்கம் கொண்டவை என்னும் கருத்தை எப்போதும் வலியுறுத்தி வந்த அவர், மத அடிப்படைவாதிகளைப் போலன்றி ஆண்
பெண் சமத்துவத்தை, பொருளாதார சமதர்மத்தை, சமூக நீதியைப் போதிப்பதே இஸ்லாம் என்னும் விளக்கங்களை வழங்கி வந்தார். “குரான் பெண்களுக்கு அளித்துள்ள அந்தஸ்தை அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் இன்று அனுபவிப்பதில்லை” என்று திரும்பத் திரும்பக் கூறுவார்.
பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர் களிடையே ஒற்றுமையையும் நல்லிணக் கத்தையும் உருவாக்குவதற்காக சூஃபி மார்க்க ஞானிகள், துறவிகள், பக்தி மார்க்கத்
துறவிகள் ஆகியோரின் கருத்துகளை எடுத்துரைப்பார். அதேவேளை இந்திய அரசியலும்,இந்திய அரசும்,பொது வாழ்க்கையும் மதச்சார்பற்றைவையாகவே இருக்க
வேண்டும் என்னும் கருத்தை இடைவிடாது வலியுறுத்துவார். தேசிய ஒருமைப்பட்டுக்
குழுவின் உறுப்பினராகச் செயலாற்றிய அவர், ‘வகுப்புவாதம் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான வன்முறைத் தடுப்பு (நியாயமும் இழப்பீடும் வழங்க வழிசெய்தல்) மசோதா 2011' நிறைவேற்றப்படுவதற்காகக் கடுமையாக உழைத்தார். ஆனால் அவரது முயற்சி இன்னும்
வெற்றி பெறவில்லை.

ஒருபுறம் இஸ்லாம் மார்க்கத்திற்கு
முற்போக்கான விளக்கங்களை வழங்கி வந்த அவர், அந்த மதத்தின் பெயரால் நியாயம் கற்பிக்கப்படும் பெண்ணடிமைத்தனம் போன்ற தீமைகளை அந்த மத சமுதாயத்திற்குள்ளிருந்தே விமர்சனம் செய்து வந்தார். தாவூதி போரா சமுதாயம் முழுவதும், தன்னை ‘இமாமின்' வழித்தோன்றல்கள் எனக் கூறிக் கொள்ளும் மதத்தலைவருக்கும் மத குருக்களுக்கும் அடிமைகள் போலக் கட்டுப்பட்டிருப்பதையும்
போரா சமுதாயத்தினரின் மனித உரிமைகள் நசுக்கப்படுவதையும் எதிர்த்து வலுவான
குரல் எழுப்பி வந்த அவர், உதய்பூரில் 1977 பிப்ரவரியில் தாவூதி போரா மத்திய வாரியத்தின் (சிமீஸீtக்ஷீணீறீ ஙிஷீணீக்ஷீபீ ஷீயீ ஞிணீஷ்ஷீஷீபீவீ ஙிஷீக்ஷீணீ)
பொதுச் செயலாளராக ஜனநாயகரீதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால், தாவூதி
போரா மதத்தலைவருக்கும் (ஷிணீஹ்மீபீணீஸீணீ) மத
குருக்களுக்கும் (ரிஷீtலீணீக்ஷீ) மிக விசுவாசம் உள்ள மதவெறியர்களால் அவர் உயிருக்கு ஆறு
முறை குறி வைக்கப்பட்டது. கெய்ரோவில் நடந்த தாக்குதலில் அவர் உயிர் பிழைத்ததே ஓர் அதிசயம்தான். சில ஆண்டுகளுக்கு முன்
மும்பையில் கிழக்கு சாந்தா குருஸ் பகுதியிலுள்ள

அவரது அலுவலகத்தைச் சூறையாடி, அரிய நூல்களையும் கையெழுத்துப்படிகளையும் தீ வைத்துக் கொளுத்தினர் அந்த மத
வெறியர்கள். தீயிலெரிந்தவற்றில் குரானின் அரிய பதிப்புகளும் இருந்ததாக என்னிடம் ஒரு
முறை கூறி மனம் வருந்தினார்.
தாவூதி போரா சமுதாயத்தைச்
சேர்ந்தவர்களிடையே தங்கள் மத குருவை இறைவனைப் போலவே கருதுகின்ற உளப்பாங்கு வளர்ந்திருந்ததால் அவர்களை அடிமை நிலையிலிருந்து வெளியே
கொண்டு வருவது அஸ்கர் அலி எஞ் சினீயருக்கு மிகக் கடினமானதாக இருந்தது. மதத் தலைவராலும் மத குருக்களாலும் மனித உரிமைகளையும் சுயமரியாதையும் இழந்தவர்களின் நிலை பற்றிக் கண்டறிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நீதிநாயகம் நத்வானி ஆணையத்திடம் உண்மையை எடுத்துச் சொல்வதே உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும்கூட நூற்றுக்கணக்கான தாவூதி
போரா முஸ்லிம்கள் அந்த ஆணையத்திடம் சாட்சியம் அளித்தனர். அந்த ஆணையத்துக்கு உதவியாக இருந்தவர்களும்கூட மத
வெறியர்களால் தாக்கப்பட்டனர். இறுதியில் 2004ஆம் ஆண்டு அஸ்கர் அலி எஞ்சினீயர் தாவூதி போரா சமுதாயத்திலிருந்தே விலக்கி
வைக்கப்பட்டார். அதற்கு முன் அவரது தாயார் இறந்துபோனபோது, அவரது உடலை தாவூதி போரா சமுதாய இடுகாட்டில்
புதைக்க விடாமல் இடையூறு செய்தனர் மதத்தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள். நவதாராளவாதப் பொருளாதாரக்
கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்த அவர், இஸ்லாம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு
முதலியன பற்றி ஏராளமான நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நோய் வாய்ப்பட்டு பல மாதங்கள் எங்கும் நகர
முடியாது இருந்த அவர், 1993ஆம் ஆண்டு
மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் நடந்ததன் இருபதாமாண்டு நிறைவையொட்டி வார்தாவில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். மதத்தின்
பெயரால் வன்முறைகளைச் செய்கிறவர்கள் இந்துக்களாகவோ முஸ்லிமாகவோ அல்லது
வேறு யாராகவோ இருந்தாலும் அவர்கள்

ஒட்டுமொத்த மானுட குலத்துக்கும் பெருங்
கேடுகளை விளைவிப்பவர்களாகவே இருப்பர் என்பதுதான் அவர் அந்தக் கூட்டத்தில் விட்டுச் சென்ற செய்தி.
ஒருபுறம் இந்துத்துவ வெறியர்களின் அவதூறுகளுக்கும், மறுபுறம் தாவூதி போரா சமுதாயத்தில் மதத்தலைவருக்கும் மத
குருக்களுக்கும் நெருக்கமாக உள்ள மத
வெறியர்களின் வன்முறைத் தாக்குதல்களுக்கும் இலக்கான அஸ்கர் அலி எஞ்சினீயர் கடந்த
மே 14 அன்று காலமானார். தங்கள் சமுதாய மக்களை என்றென்றும் அடிமைச் சங்கிலியில் பூட்டி வைத்திருக்க விரும்பும் மதத்தலைவர், மத குருக்கள் ஆகியோரின் விருப்பப்படி
செயல்படுகிறவர்கள், அவரது உடலை அந்த சமுதாயத்திற்கான இடுகாட்டில் புதைக்க இடம் தர மறுத்துவிட்டனர். நல்லெண்ணம்
கொண்ட ஸன்னி முஸ்லிம்கள், தங்களது இடுகாட்டில் அவரது உடலை நல்லடக்கம்
செய்ய முன் வந்தனர்.
ஆக, நம் காலத்தில் வாழ்ந்த மாபெரும் மனிதநேயரும் இஸ்லாமிய அறிஞரும் மதச் சார்பற்ற பொதுப் பண்பாட்டை உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்தவரும், முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும்
சுயமரியாதைக்காகவும் போராடியவருமான ஒருவரது உடலை முறைப்படி நல்லடக்கம்
செய்ய முடியாமல் போனது மாபெரும் அவலம்.

Read 1453 times
Rate this item
(0 votes)
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

video

video

video

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %